நேருவின் பிறந்த நாள் – சோனியா, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேரு நினைவிடத்தில் மரியாதை

 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நேருவின் 130-வது பிறந்ததாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Exit mobile version