இயற்கை மருத்துவத்தின் மூலம் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு

வளரிளம் பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகபெரிய பிரச்சனை முகப்பருக்கள், இந்த முகப்பருக்களை எளிதில் போக்க அவர்கள் பல்வேறுபட்ட கெமிக்கல்சை உபயோகபடுத்துகின்றனர். இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மறைகிறதோ இல்லையோ முகத்திற்கு கெடுதல் உண்டாக்குகிறது.

அந்த வகையில் அந்த காலத்திலேயே இயற்கை முறை மருந்துகள் பல நம் முன்னோர்கள் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் மறைவதில்லை இதனால் முகமே பொலிவற்று இருக்கும், இதை போக்க, சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயம் முகப்பரு தழும்பை மட்டும் நீக்குவதில்லை, முகத்தின் தோற்றத்தை அழகாக மாற்றும் சக்தி உடையதாக இருக்கிறது.

அந்த வகையில் எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து, அதை முகப்பருக்கள் மீது தடவினால் முகம் மென்மையாக மாறும், மற்றும் எலுமிச்சை சாற்றின் சக்தியால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.

அதுமட்டுமல்லாமல் ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து, முகத்தில் தடவினால், பருக்கள் உதிர்ந்து தழும்புகள் மறையும், திரும்ப பருக்கள் வருவதை தடுக்கிறது ஆலிவ் ஆயில்.

வெந்நீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து அரைத்து, குளிர்ந்த பின், தழும்பு உள்ள இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வெந்தயத்தை ஊற வைத்து விழுது போல் அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போலும் பயன்படுத்தலாம். பயன்படுத்திய பிறகு முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகாக மென்மையாக இருக்கும்.

Exit mobile version