கோடை காலத்தில் பானையை ஏராளமானோர் வாங்கிச் செல்வதால், அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் பகுதியில் ஏராளமானோர் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை மற்றும் சுப தினங்களில் மட்டுமே பானை அதிகமாக விற்பனையாகும் நிலையில், கோடை காலத்தில் ஏராளமானோர் மண் பானையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மண் பானை தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு ஆரோக்கியமானது என்பதால், பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாக குயவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.