ஆடை படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது..

ஜுலை 19ம் தேதி வெளியான ஆடை படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேயாத மான் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில், வீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அமலா பால் நடித்திருக்கும் படம் தான் ஆடை. இப்படத்தில் மிகவும் தைரியமாக அமலா பால் நடத்திருப்பது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அமலா பால் ஒரு இடத்தில் ஆடையின்றி சிக்கிகொள்கிறார்.ஒரு கண்ணாடி துண்டினை வைத்து தன் உடம்பினை மறைத்தப்படி தப்பிபதற்கான வழியை தேடுகிறார்.எப்படி அந்த இடத்தை விட்டு வெளியே வருகிறார் என்பது தான் படத்தின் கதை.இந்த நிலையில் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தனது நடிப்பின் மூலம் நம் கண் முன் கொண்டுவருகிறார் அமலா பால்.ஆடை திரைப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது 2 நிமிடம் கொண்ட ஸ்னீக் பீக் வீடியோவை படகுழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version