நாகையில் மினிவேனில் கடத்தி வரப்பட்ட 6,970 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகை மாவட்டம் குத்தாலத்தில், மினிவேனில் கடத்தி வரப்பட்ட 6 ஆயிரத்து 970 வெளிமாநில மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராஜகோபாலபுரத்தில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காவல் துறையினரை கண்டதும் மினிவேனில் இருந்தவர்கள் தப்பியோடினர். அந்த வேனில், பாண்டிச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்கள் 145 அட்டைப் பெட்டிகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-சேத்பட் சாலையில் மதுவிலக்கு நுண்ணறிவு பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மது பாட்டில்கள், 50 லிட்டர் எரி சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் மதுவிலக்கு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் இருந்து பரிசுப்பொருட்கள், மதுப்பாட்டில்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் வாகன சோதனையில் நடத்தப்பட்டது.

Exit mobile version