மாணவர்களின் திறனை மேம்படுத்தும் ஸ்மார்ட் வகுப்புகள்

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

துணைவேந்தர் டாக்டர் பாலச்சந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பால்வள தொழில்நுட்பம், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறினார். மேலும் மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் நவீன ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version