பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு – அரசாணை வெளியீடு

தமிழக அரசு வழங்க உள்ள ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் அனைத்து விவரங்களும் இடம்பெறும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு, மாணவர்களின் பல்வேறு விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ளார்.

இந்த ஸ்மார்ட் கார்டில், மாணவரின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர், முகவரி, மாணவரின் புகைப்படம், பள்ளியின் பெயர், ரத்த வகை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கார்டு மூலம், மாணவர்களின் இடைநிற்றல் விவரங்களையும், அறிந்து கொள்ள முடியும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.மாணவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால், ஸ்மார்ட் கார்டு மூலம் அவருடைய தகவலைத் தெரிந்துகொண்டு, அவருக்கு உதவிசெய்யவும் இந்த ஸ்மார்ட் கார்டு பயன்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து விவரங்களும் கல்வி தகவல் மேலாண்மை முகமை மூலம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version