ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தம்

சென்னையில் ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடும் வெளிநாட்டு கும்பலை காவல்துறை கைது செய்துள்ளனர்.

சென்னை அயனாவரம் பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 15ம் தேதி மாலை 5 மணியளவில் , தலைக்கவசம் அணிந்து வந்த நபர் ஒருவர் ஸ்கிம்மர் கருவியை பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஏ.டி.எம். ஸ்கிம்மர் கருவி பொருத்திய விவகாரம் தொடர்பாக பல்கேரியா நாட்டை சேர்ந்த நிகோலா, போரிஸ், லியூம்பாபி ஆகிய 3 பேரை கண்ணகி நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 50 போலி ஏ.டி.எம். கார்டுகள், ஸ்கிம்மர் கருவிகள், என்கோடர் கருவி மற்றும் 7 லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, மூன்று பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Exit mobile version