முன்பகை காரணமாக அதிமுக பிரமுகரைக் கொல்ல முயன்ற 6 பேர் கைது

தேர்தல் முன்பகை காரணமாக அதிமுக பிரமுகரைக் கொல்ல வந்த கூலிப்படையினர் 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் அதிமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், முன்பகை காரணமாகச் சிலர் கூலிப் படையை அமைத்து அசோக்குமாரைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த 6 பேரைக் காவல்துறையினர் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததும், அவர்கள் அசோக் குமாரைக் கொல்லத் திட்டம் தீட்டியதும் தெரிய வந்ததையடுத்து அவர்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Exit mobile version