கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை குறித்த ஆய்வு காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் திடீரென நடத்தப்பட்டது.. கோவில்பட்டி மார்க்கெட், மெயின் பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன..