குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்று வரும் பழக்கண்காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. பழக்கண்காட்சி இன்றுடன் முடிவடைவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. பூங்காவின் நுழைவு வாயிலில் பலவகை பழங்களால் வரவேற்பு வளையமும், பூங்காவுக்குள் ஒன்றரை டன் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள் போன்ற
பழங்களால் வண்ணத்துப் பூச்சி, மாட்டு வண்டி, மயில், பழ வியாபார தம்பதி உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.