15 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளோம்: மேடியின் உருக்கமான பதிவு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் படத்தில் நம்பியின் மனைவியாக சிம்ரன் நடிக்கவுள்ளதாக மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும்,விண்வெளி பொறியாளருமான நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு Rocketry:The Nambi Effect திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது.இப்படத்தில் நம்பி நாராயணாக மாதவன் நடிக்கிறார்.இத்திரைப்படமானது தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது.

இப்படத்தினை பற்றிய மற்றோரு சுவாரஸ்யமான தகவலும் வெளியாகியுள்ளது.இத்திரைப்படத்தில் நம்பியின் மனைவியாக சிம்ரன் நடிக்கவுள்ளார்.இது குறித்து மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்ரன்,மேடி எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அதில்
15 வருடங்களுக்கு பிறகு Mr. & Mrs Nambi Narayanan-ஆக மாறிய திரு,இந்திரா என குறிப்பிட்டுள்ளார்.

திரு,இந்திரா கதாபாத்திரமானது 17 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் இருவரும் நடித்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படமாகும்.

Exit mobile version