தென்கொரியா -இந்தியா இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

தீவிரவாத எதிர்ப்பு தொடர்பாக தென்கொரியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் இருநாட்டு நட்புறவில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவிற்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தென்கொரிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள கே9 வஜ்ரா பீரங்கி இதற்கு உதாரணம் என்று தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோலில் அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இதையடுத்து இருநாடுகளுக்கிடையில் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Exit mobile version