அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள கடலை விவசாயத்தை காப்பாற்ற மானிய விலையில் உரம் மற்றும் மருந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மலைப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கடலை சாகுபடி செய்துள்ளனர். தற்போது நிலவும் பருவநிலை மாற்றம் காரணமாக நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக கடலை விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரம் மற்றும் மருந்தினை மானிய விலையில் தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.