துரைப்பாக்கத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த கடைகள் அகற்றம்

துரைப்பாக்கத்தில், உரிய அனுமதியின்றி கட்டப்பட்டு இயங்கி வந்த கடைகளை, நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் இடித்து வருகின்றனர்.

சென்னை மகாபலிபுரம் சாலையில் உள்ள துரைப்பாக்கம் பிரதான சாலையில், ஓ.எம்.ஆர் ஃபுட் ஸ்ட்ரீட் என்னும் வணிக வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. சில வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த வளாகத்தில், உரிய அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியுள்ளதாக தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், உரிய அனுமதியின்றி இயங்கும் கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து, தற்போது சென்னை மாநாகராட்சியின் சார்பில், உதவி பொறியாளர் சத்திய நாராயணன்தலைமையில் போலீசார் கடைகளை இடித்து வருகின்றனர்.

Exit mobile version