தந்தி அனுப்பும் முறையை தமிழில் அறிமுகப்படுத்தியவரான சிவலிங்கத்தின் இறப்பு, தமிழகத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு என தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் மட்டுமே இருந்து வந்த தந்தி அனுப்பும் முறையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் சிவலிங்கம். தபால் துறையில் பணியாற்றி வந்த அவர், தமிழில் தந்தி அனுப்பும் முறையை கடந்த 1954 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்த தமிழக அரசு தமிழில் தந்தி அனுப்பும் முறையை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது.
இந்நிலையில், 94 வயதான சிவலிங்கம் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். சிவலிங்கத்தின் விருப்பப்படி அவரது உடல் திருச்சி மருத்துவ கல்லூரியில் இன்று ஒப்படைக்கப்பட்டது அவரது மறைவுக்கு தமிழுக்கு மிகப்பெரிய இழப்பு என தமிழ் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.