3 முட்டைகளுக்கு ரூ.1,672 பில்லா: இசையமைப்பாளர் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கிய இந்தி திரையுலக இசையமைப்பாளர் ஷேகர் ராவ்ஜியானி தான் சாப்பிட்ட 3 முட்டைகளுக்கு அதிக வசூல் செய்யபட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், 3 முட்டைகளை சாப்பிட்டுள்ளார், அதற்காக ஓட்டல் நிர்வாகம் 1,350 ரூபாயுடன் ஜிஎஸ்டி 322 ரூபாயை சேர்த்து 1,672 ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இதற்கான ரசீதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு 3 முட்டைகளுக்கு இவ்வளவு கட்டணமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version