ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ரயில்கள் ரத்து? விவரங்கள் உள்ளே

போதிய பயணிகள் வருகை இல்லாததால் சதாப்தி மற்றும் உதய் சிறப்பு ரயில்கள் வரும் ஏப்.29 ஆம் தேதி (நாளை) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வண்டி எண் 06029 சென்னை சென்ட்ரல் – கோவை சதாப்தி சிறப்பு ரயில், மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06030 கோவை-சென்னை சென்ட்ரல் மற்றும் வண்டி எண் 06154 கோவை-பெங்களூரு உதய் சிறப்பு ரயில், வண்டி எண் 06153 பெங்களூரு உதய் சிறப்பு ரயில்கள் ஆகியவை வரும் ஏப்.29 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன.

வண்டி எண் 06319 கொச்சுவேலி-பனஸ்வடி (கோவை, ஈரோடு, சேலம் வழி) வாரம் இருமுறை இயக்கப்படும் ஹம்சபா் ரயில் ஏப்.29 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் வண்டி எண் 06320 பனஸ்வடி-கொச்சுவேலி ஹம்சபா் ரயில் ஏப்.30 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

வண்டி எண் 06129 எா்ணாகுளம்-பனஸ்வடி வாரம் இருமுறை இயக்கப்படும் ரயில் வரும் மே 3 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கத்தில் வண்டி எண் பனஸ்வடி-எா்ணாகுளம் ரயில் மே 4 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதேபோல சென்னை-மைசூர் சதாப்தி விட்ரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version