அணில்களால்தான் மின் தடை ஏற்படுவதாக, தமிழ்நாடு அமைச்சர் கண்டுபிடித்ததுதான் இப்போது ஆன்லைனில் பேசுபோருள். இந்நிலையில் அமைச்சரின் கண்டுபிடிப்பால் அப்செட்டான அணில்கள் ஆளாளுக்கு இணையதளம் வழியாக பதில் சொல்வதாக நெட்டிசன்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அவற்றில் சில:
“நீங்க வேலை செய்யாததை மறைக்க எங்க மேல பழி போடறீங்களா – கரூர் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பால் கடுப்பான அணில் குடும்பத்தாரின் கண்டனங்கள்”
“ஊருக்குள்ள வேற எவனும் காரணமில்லையாம். நான் ஒரு காரணமுன்னு கதை கட்டி விட்டானுங்க: கரண்டே வராட்டாலும் பரவால்ல. இனிமே உங்க கம்பத்து பக்கம் வரமாட்டேண்டா – உண்மையான சுயமரியாதை உள்ள அணில்.”
“உண்மை என்னன்னா… உங்க ஆட்சில கரண்டே இருக்காதுங்கிற தைரியத்துலதான், கம்பி மேலயே சர்க்கஸ் பழகுறோம். ஆனா, பாருங்க இப்போ எங்களால கரண்ட் இல்லைன்னு கம்பி கட்டுற கதை வுடுறாப்ள”
“வாயில்லா ஜீவன்தான, வந்து சாட்சியா சொல்லப்போகுதுங்கிற தைரியம்தானே… வாழ்க்கை பூரா எனக்கு பல்லு வளந்துட்டே இருக்கும்டியோவ். ஞாபகம் வெச்சுக்க!”
”நாங்க பாட்டுக்கு தென்னை மரம், கொய்யா மரம், சப்போட்டோ மரம், மாமரம்னு தாவித்தாவி விளையாடிகிட்டு இருந்தா, இந்த செந்தில் பாலாஜி நம்மகிட்டயே விளையாட்றான். காத்தடிச்சா மரம் முறிஞ்சு விழும் அதனால மின் தடை ஏற்படும். அதை நம்புவாங்க. நாங்க (அணில்கள்) ஓடுவதால் மின் தடை ஏற்படுதுனு சொல்றதை எல்லாம் எப்படிங்க நம்புவாங்க.. உங்க நிர்வாகத்திறமையை மறைக்க கடைசியில எங்கபேர்ல பழியைத்தூக்கிப்போட்றீங்க.. என்னத்த சொல்ல..?”
– அணிலார்
இப்படியாக, உயிரினங்களாகவே மாறி செந்தில்பாஜியை செய்யத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். வழக்கம்போலவே இல்லை என்று மழுப்ப ஏதாவது கதையை தயார் செய்துகொண்டு வரட்டும். அதற்குள் நாம் விட்டாலும் அப்செட்டாகி இருக்கும் அணில் குடும்பங்கள் விடமாட்டார்கள் போலும்.