இரண்டாவது நாளாக செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு!

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக உள்ள செந்தில்பாலாஜி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கமிஷன் விவகாரம் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களிடம் கரூர் கம்பெனி என்ற பெயரில் கமிஷன் கேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான், வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, கரூர் உள்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Exit mobile version