மாவட்டத்திற்கு தலா 2 பட்டய கணக்காளர்கள் பயிற்சி மையங்கள், தமிழக மாணவர்கள் 25 ஆயிரம் பேர் பயன் பெறுவர் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

பட்டய கணக்காளர் தேர்வில் தமிழக மாணவர்கள் 25 ஆயிரம் பேர், வெற்றி பெறும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி துறை சார்பில் பட்டய கணக்காளர் தேர்வுக்கு, மாநில அளவில் கருத்தாளர்கள் பயிற்சி முகாமை சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் அவர் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வு பயிற்சிக்கு ஆன் லைன் மூலம் 26 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருவது போன்று, பட்டய கணக்கு பயிற்சியும் இன்று தொடங்கப்படுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். பிளஸ் டூ தேர்வு எழுதிய பிறகு உடனடியாக மாணவர்கள், பயிற்சி மையத்தில் பதிவு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றும், ஒரு மாவட்டத்திற்கு 2 மையங்கள் என்ற முறையில் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version