ரயில் கொள்ளை எதிரொலி: வேலூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு தீவிரம்

ரயில் கொள்ளையை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் சிக்னல்களில் ரயில் நிறுத்தப்பட்டபோது பயணிகளிடம் கொள்ளையர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, வேலூர் மாவட்டத்தில் ரயில்வே எஸ்.பி. நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் ரயில் நிலையங்கள் மற்றும் சிக்னல்களில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே போலீசாரும் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் குழுவினர் 24 மணிநேரமும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காட்பாடியில் கிளித்தான்பேட்டறை, ஜாப்ராபேட்டை ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

Exit mobile version