நாளை வேளாங்கண்ணி பேராலய திருவிழா தொடங்குவதை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள், வேளாங்கண்ணியில் குவிந்து வருவதால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
தொலைதூரத்தில் இருந்து ரயில், பேருந்து மற்றும் நடைபயணமாக வரும் பக்தர்கள் தங்குவதற்கு கூடுதலான விடுதிகள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர், மருத்துவம், இலவச உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டினத்தை சுற்றி 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை சார்பில் 600 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.