வங்க தேசத்தில் பொதுத் தேர்தலையொட்டி பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

 

வங்க தேசத்தில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் டிசம்பர் 30-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் வங்கதேச தேசியவாத கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., வங்கதேச தேசிய கட்சி (பி.என்.பி.) தலைவர்களின் உதவியுடன் பொதுத் தேர்தலை சீர்குலைக்க முயல்வதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, குற்றம்சாட்டியுள்ளார். பொதுத்தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பொதுத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version