சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் தலை உள்ளிட்ட பாகங்களை மூன்றாவது நாளாக போலீசார் இன்றும் தேடிவருகின்றனர். சென்னை பள்ளிக்கரணை குப்பை கிடங்கில், கடந்த மாதம் 21ஆம் தேதி பெண்ணின் இரண்டு கால், கை கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 16 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கில் துப்பு துலங்கியது.
அதன்படி, கொல்லப்பட்ட பெண் கன்னியாகுமரியை சேர்ந்த சந்தியா என்பதும், அவரது கணவர் பாலகிருஷ்ணன் அவரை படுகொலை செய்து, உடலை வெட்டி வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், சந்தியாவின் பிற உடல் பாகங்கள் குறித்த அவரிடம் விசாரணை நடத்தினர்.
பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டிய ஈக்காட்டுத்தாங்கல் கூவத்தில் இருந்து சந்தியா உடலின் மற்றொரு பாகம் மீட்கப்பட்டது. தலை மற்றும் வயிறு பகுதியை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பெருங்குடி குப்பை கிடங்களில் தலையை தேடும் பணி 3வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே ஆலந்தூர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
Discussion about this post