சென்னையில் அனுமியின்றி, சுகாதாரமின்றி செயல்பட்ட உணவகங்கள், பேக்கரிகளுக்கு சீல்லைப்பு

 

சென்னையில் முறையான அனுமதியின்றியும், சுகாதாரமின்றியும் இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் சென்னை மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி பாலச்சந்திரன், முறையான அனுமதியின்றியும் சுகாதாரமின்றியும் இயங்கி வந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட 8 கடைகளின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது அனுமதி கிடைத்ததையடுத்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக கூறினார். கடை உரிமையாளர் மீண்டும் முறையான அனுமதி பெற்றால் கடைகளை திறக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version