மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்தியா போஸ்ட் விமானத்தை ஏற்றிவந்த டிரக் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா போஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த ஒரு ஆண்டாக போக்குவரத்திற்கு பயனின்றி அனாதையாக விடப்பட்டிருந்தது. இந்த விமானத்தை ஏற்றி கொண்டு ராட்சத டிரக் ஒன்று மேற்குவங்க மாநிலம் துர்காபூர் மாவட்டத்திலிருந்து பாசிம்பர்த்மான், தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே பாலம் இருந்ததால் பாலத்தின் அடியில் மெதுவாக வந்து கொண்டிருந்த போது மேலும் நகர முடியாமல் விமானத்துடன் சிக்கிக்கொண்டது. தகவலறிந்த காவல்துறையினர் டிரக்கை மீட்க பல மணி நேரமாக முயற்சித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.