52 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட பள்ளி பருவ நண்பர்கள்

வாழப்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 52 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஒன்றுக்கூடி பள்ளி பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் 1964 முதல் 1966 ஆம் ஆண்டு வரை படித்த மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் 34 பேர் பங்கேற்று தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளி நண்பர்களை சந்தித்த அவர்கள், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொண்டதுடன், இளமை பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற பலரும் மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version