அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் மானியம் வழங்கும் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பகுதியில் மகளிர் 27 பேருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானிய தொகையை மின்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

ஆலாம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பணிக்கு செல்லும் மகளிர் 27 பேருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவதற்கான ஆணையை வழங்கினார்.

இருசக்கர வாகனங்களை பெண்கள் வாங்கியவுடன், பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எஸ். செந்தில் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Exit mobile version