மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் இன்று வரை காலநீட்டிப்பு:சென்னை மாநகராட்சி

அம்மா இருசக்கர மானியம் பெற  இன்று மாலை 5 மணி வரை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்து இருந்தார். அதன்படி, இந்த நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க கடந்த 21ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு  இருந்தது.  இதை இன்று வரை சென்னை மாநகராட்சி நீட்டிப்பு செய்துள்ளது. அதன்படி இன்று மாலை 5மணி வரை  அம்மா இருசக்கர வாகனத்திற்காக  மண்டல அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மானியமாக 25 ஆயிரம் ரூபாய் அல்லது இருசக்கர வாகனத்தின் விலையில் பாதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Exit mobile version