மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

மகாராஷ்டிரத்தில் பாஜகவை அரசமைக்க அழைத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சார்பில் தொடரப்பட்ட வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று  விசாரணை நடைபெற்றது. அப்போது, மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதற்கிடையே, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 2 அல்லது 3 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை கேட்கப்பட்ட நிலையில், இதுபோன்ற வழக்குகளில் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினார்.

Exit mobile version