எஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் சேவைக் கட்டணங்கள் ரத்து

எஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப் பரிமாற்றத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்.பி.ஐ. வங்கியில் இன்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தது. மேலும் வங்கியின் மார்க்கெட் பங்குகள் 18 சதவீதம் மொபைல் பேங்கிங் மூலம் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT), உடனடி கட்டண சேவை (IMPS) மற்றும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் நிகழ்நேர மொத்த தொகை செலுத்தல் (RTGS) ஆகியவற்றின் சேவைக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. இவை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version