போலீஸ் எனக்கூறி 1 கோடியே 40 லட்சம் கொள்ளை !

கடந்த 3ஆம் தேதி சவுகார்பேட்டை வீரப்பன் தெருவில் ஆந்திராவை சேர்ந்த ரகுமான் மற்றும் சுபாரா ஆகியோரிடம் நகை வாங்குவதற்காக வைத்திருந்த 1 கோடியே 40 லட்சம் ரூபாயை, போலீஸ் எனக்கூறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், முக்கிய குற்றவாளியான இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Exit mobile version