தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில், வெள்ளி சப்பரத்தில் அம்மன் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகரில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நடைபெறும் தசரா திருவிழா, கோடை விழாவில் அம்மன் சப்பர பவனி நடைபெறும். இந்த சப்பரபவனியில் ஒவ்வொரு கோவில்களிலும் சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அந்த வகையில், பழமை வாய்ந்த தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலுக்கு எட்டேகால் அடி உயரத்தில் வெள்ளி சப்பரம் 120 கிலோ எடையில் பக்தர்களால் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த சப்பரத்தில் 5 சிங்கம் இருப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த ஆலயத்தின் வருஷாபிஷேக விழாவையொட்டி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் 4 ரத வீதியில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்களாக பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.