அஜித்தை இமிடேட் செய்த சல்மான் கான்…வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் அஜித்  எப்படி மாஸ் ஹீரோவோ, அதே போல் தான் பாலிவுட்டில் சல்மான் கான்.இவர் அஜித்தை இமிடேட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
பாலிவுட்டில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ஹீரோக்களில் சல்மான் கானும்  ஒருவர்.சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த  தபாங் 3 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.மேலும் இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், சல்மானிடம் அஜித்தின் புகைப்படத்தை காட்டிய போது, சிறிதும் யோசிக்காமல் வாலி படத்தின் பேமஸ் ஆன  ‘டொக் டொக்’காட்சியை நடித்துக்காட்டியுள்ளார்.பாலிவுட் சூப்பர் ஹீரோன சல்மான், அஜித்தின் திரைப்பட காட்சியை நடித்து காட்டியது தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

 

 

Exit mobile version