சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தும் இந்து அமைப்புகளுக்கு பா.ஜ.க. எம்.பி. சுப்ரமணியசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்கும் போது, அதனை பாரம்பரியம் என்ற பெயரில் எதிர்ப்பது சரியில்லை எனத் தெரிவித்துள்ளார்.
முத்தலாக் விவகாரத்திலும் பாரம்பரியத்திற்கு எதிராகத் தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என குறிப்பிட்ட சுப்ரமணியசாமி, அதனை ஆதரித்த இந்து அமைப்புகள் இப்போது எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தீர்ப்பானது, இந்து மறுமலர்ச்சிக்கும், இந்து பழமைவாதத்திற்கும் இடையே நடக்கும் மோதல் என குறிப்பிட்டுள்ளார்.