ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கய தென்னாப்பிரிக்க அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 29.2 ஓவரில் 154 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது.

 

Exit mobile version