'பாப்பாய்' கார்ட்டூன் கதாபாத்திரம் போல் மாற நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

90’s kids-களால் மறக்க முடியாத கார்டூன் என்றால், அது ‘பாப்பாய்’ தான். இன்றுவரை அந்த கார்டுனுக்கு தனி ரசிகர் பாட்டாளமே உண்டு. அந்த கார்டூனில் வரும் ‘பாப்பாய்’ தன்னுடைய சக்திய அதிகரிக்க கீரைய சாப்பிட்டி விட்டு சண்டை போடுவார். கார்டூனில் வரும் ‘பாப்பாய்’ கதாபாத்திரத்தின் உடல் அமைப்பு சற்று வித்தியாசமானதாக இருக்கும். உடல் ஒல்லியாகவும், இரு கை பகுதிகளும் உடலைவிட பெரிதாகவும் இருக்கும். ‘பாப்பாய்’ கார்டூனால் ஈர்க்கப்பட்ட ரஷ்ய இளைஞர் ஒருவர், ‘பாப்பாய்’ போன்று உடலமைப்பை மாற்ற முயன்று படாதபாடு பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த கிரில் தெராஷின், அறுவை சிகிச்சை செய்து பெட்ரோலியம் ஜெல்லியை இரு கைகளிலும் ஊசி மூலம் ஏற்றி விபரீத ஆசையை தீர்த்து கொண்டார். ‘பாப்பாய்’ போன்று கைகளை பெற்று கிரில் தெராஷின் பிரபலமானார்.

இந்த விபரீத முயற்சியால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த தெராஷின், மருத்துவர்களை நாடியுள்ளார். கைகள் இதேபோன்று இருந்தால், கைகளை எடுக்க வேண்டிய நிலை வந்து உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து வேறுவழியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து செயற்கையாக திணிக்கப்பட்ட ஒன்றரை கிலோ சதை நீக்கப்பட்டது.

தெராஷினின் விபரீத முயற்சி, இயற்கைக்கு மாறாக உடலமைப்பை மாற்ற முயற்சி செய்யும் இளைஞர்களுக்கு பாடமாக அமைந்து விட்டதாக இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Exit mobile version