இரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட்..சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை..!

இரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது கைது நடவடிக்கை மேற்கொள்ள வாரண்ட் அளித்துள்ளது. அதற்கான காரணம் உக்ரைன் போர்தான். இரஷ்யாவிடம் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் கோரிக்கை வைத்தாலும் இரஷ்யா பின்வாங்க மறுக்கிறது. மேலும் பல்லாயிரக்கணக்கான உயிர்பலிகள் என்று இரஷ்ய ராணுவம் பல நாச செயல்களில் ஈடுபட்டுள்ளது. உக்ரைனும் தொடர்ந்து உலகநாடுகள் மத்தியில் தங்கள் பிரச்சினைகளை எடுத்து கூறிவருகிறது. மேலும் சர்வதேச நீதிமன்றங்கள் போன்றவற்றில் வாதாடி பார்த்துவிட்டது. ஆனால் இரஷ்யா எதற்கும் பிடிகொடுக்கவில்லை. ஆனால் தற்போதைய கைது நடவடிக்கையானது மாஸ்கோ-உக்ரைனில் இருந்து குழந்தைகளைக் கடத்தியதற்காக புதின் மீது போர்க்குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Exit mobile version