தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு அக்டோபர் 22 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில், மாநில நிர்வாகிகள் தேர்தல் நடத்த பிசிசிஐ அனுமதி வழங்கியது. இதையடுத்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு ரூபாவுக்கு எதிராக யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த சீனிவாசனின் மகளான ரூபா, அச்சங்கத்தின் முதல் பெண் தலைவராகிறார்.