மாமல்லபுரம் நடனத் திருவிழாவுக்கு ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு

மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள இந்திய நடனத் திருவிழாவுக்காகத் தமிழக அரசு 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இந்திய நடனத் திருவிழா என்னும் பெயரில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். நடைபெறவுள்ள இந்திய நடனத் திருவிழாவுக்காகச் சுற்றுலாத் துறை இயக்குநர் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கக் கோரியிருந்தார். இந்நிலையில் மாநில அரசு 50 லட்ச ரூபாயும், மத்திய அரசு 25 லட்ச ரூபாயும் என மொத்தம் 75 லட்ச ரூபாய் வழங்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் பங்கான 50 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Exit mobile version