திமுக கொடி பொருத்தப்பட்ட காரில் ரூ.7லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: திமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது!

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளநோட்டுகள் மாற்றப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், சேந்தமங்கலம் பயணியர் மாளிகை அருகே திமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சுமார் 7லட்சம் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். பின்னர், அந்த வாகனத்தில் இருந்த வாழவந்திநாடு ஊராட்சியின் திமுக இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version