ஈரோட்டில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு சார்பில் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது
முதலமைச்சரின் 110 விதியின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 67 கோடியே 76 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. வளர்ச்சி மற்றும் அனைத்து துறைகளின் சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செம்மலை, தென்னரசு, ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். இந்தப் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.