அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

பட்ஜெட்டில் அத்திக்கடவு – அவினாசி திட்டத்துக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு 700 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு பணிகளுக்கு ஐந்தாயிரத்து 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்வளத்துறைக்கு ஆயிரத்து 229 கோடி ரூபாயும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு 405 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு 15 ஆயிரத்து 863 கோடி ரூபாயும், பேரிடர் மேலாண்மை துறைக்கு ஆயிரத்து 360 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்துறைக்கு 20 ஆயிரத்து 115 கோடி ரூபாயும், பள்ளிக் கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 841 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ஐந்தாயிரத்து 52  கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Exit mobile version