1364 நீர்ப்பாசனப் பணிகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் நீர்ப்பாசனத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக உயர்த்தி 6991.89 கோடியாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

வரும் ஆண்டில் 1364 நீர்ப்பாசனப் பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு – அவிநாசி நீர்ப்பாசனத் திட்டத்திற்கான சுற்றுச்சுழல் அனுமதியை அரசு பெற்றுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்காக சாரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், இதற்கென முதற்கட்டமாக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

906 குளங்கள், 183 அணைக்கட்டுகளைப் புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமானப் பணிகளுக்காக 649.55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டமாக காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

Exit mobile version