ரயில்வேயில் வேலை பெற்று தருவதாக கூறி ரூ.48 லட்சம் மோசடி

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 48 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி தஞ்சையைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் 48 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட பத்மநாபன், தலைமறைவானார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகேசன் புகார் அளித்த நிலையில், ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் பத்மநாபனை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து போலி ஆவணங்கள், ரயில்வே முத்திரையுடன் கூடிய லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். திருச்சி, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Exit mobile version