சென்னை சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றங்கரையில் 13 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, வெள்ள பாதிப்புள்ள பகுதியில் இருந்த கட்டடத்திற்கு அனுமதியளித்த வருவாய் துறை செயலாளர், வருவாய் துறை ஆணையர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. வழக்கு விசாரணையில் வருவாய் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் துறை ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். அப்போது, சென்னையில், 2015 வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு விரிவான அறிக்கை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதில், வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை அரசிடம் கோரியுள்ளதாக குறிப்பிட்டப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை, வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சென்னையில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.2,500 கோடி கேட்பு
-
By Web Team
- Categories: இந்தியா, தமிழ்நாடு
- Tags: 500 கோடி கேட்புரூ.2வெள்ள தடுப்பு நடவடிக்கை
Related Content
தமிழக அரசின் ரூ.2,000 ஊக்கத்தொகை பெறுவதற்கு பொதுமக்கள் ஆர்வம்
By
Web Team
February 22, 2019