2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 218 கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 13ம் தேதி 76 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்த திட்டமான அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கும், விளையாட்டு போட்டிகள் நடத்தவும், 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்க கூடிய வகையில், செயல்திறன் மையம் உருவாக்கப்படும் என துணை முதலமைச்சர் தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் 2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு 218 கோடியே 66 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.