திண்டுக்கல்லில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.64லட்சம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் இருந்து கேரளா சென்ற வங்கி மேலாளர் பிரசாந்த் என்பவரிடம் உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயும், திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்த  திருமலைச்சாமி என்பவரிடம் இருந்து 67 ஆயிரம் ரூபாயும்,  சத்திரப்பட்டியில் இருந்து கேரளாவிற்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரியை சோதனை செய்ததில் உரிய ஆவணமின்றி இருந்த 75 ஆயிரம் ரூபாய் பணமும்  பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version