ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த மார்ச் 20, 2019 முதல் ஏப்ரல் 30,2019 வரையிலான காலகட்டத்தில் உற்பத்தி செய்த புல்லட் பைக்குகளை ரீ கால் செய்வதாக அறிவித்துள்ளது. அந்த காலக் கட்டத்தில் உற்பத்தி செய்ப்பட்ட பைக்குகளில் பிரேக் கேலிப்பர் போல்ட்டில் கோளாறு இருப்பதாகவும், அதனால் பிரேக் கேலிபர் போல்டுகளின் டார்க் விசையானது குறிப்பிட்ட அளவீடுகளின்படி இல்லை எனவும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கருதுகிறது.
பாதிக்கப்பட்ட சுமார் 7000 பைக்குகளை கண்டறிந்து, அதன் உரிமையாளருக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தகவல் அளித்துள்ளது. மேலும், பிரேக் கேலிப்பர் போல்ட்டை செக் செய்து, தேவைப்பட்டால் இலவசமாக மாற்றி தரவும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.